BSNL ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்குவதற்கான கடிதத்தை, கார்ப்பரேட் அலுவலகம், ஏற்கனவே 30.07.2021 அன்று வெளியிட்டு விட்டது. அந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கான தேதிகளை, கார்ப்பரேட் அலுவலகம், 06.08.2021 அன்று வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 07.08.2021 முதல் 16.08.2021 வரை, ஊழியர்கள் ERP மூலமாக விருப்பம் தெரிவிக்கலாம்.
17.08.2021 மற்றும் 18.08.2021 ஆகிய தேதிகளில், விருப்பங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய விரும்பும் தோழர்கள், ERP மூலமாக இணைந்து கொள்ளவும்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்