தோழர்களே! நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் செலவில், நம் குடும்பத்தை காக்க சிறப்பான ஒரு ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நமது BSNLEU மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியால் இன்று நாம் சாத்தியமாக்கியுள்ளோம். ஆம் தோழர்களே! கொரானா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் நம் தோழர்கள் சந்தித்த சவால்களையும் கடினமான மருத்துவ செலவுகளையும் கணக்கில் கொண்டு ஊழியர் நலன் காக்கும் சிந்தனையோடு நாம் எடுத்த முயற்சி இன்று நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் 8,880 மருத்துவமனைகளிலும், தமிழகத்தில் 812 மருத்துவமனைகளிலும், சேலம் மாவட்டத்தில் 45 மருத்துவமனைகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் 13 மருத்துவமனைகளிலும், நமக்கும், நமது குடும்பத்திற்கும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
BSNL HIS மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் தொகை (பாழாய்ப்போன GST வரியுடன்) ஆண்டொன்றுக்கு ரூ.7198.00, செலுத்த வேண்டும். 365 நாட்களுக்கு கணக்கு போட்டால், நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய்க்கு கீழ் தான் செலவு வரும்.
எளிதில் புரியாத கேள்விகளுடனான விண்ணப்பங்கள், மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை நகல் , போட்டோ, குடும்ப போட்டோ என சிரமமான வேலைகள் ஏதுமின்றி, ERP-ESSல் OPTION கொடுத்தால் போதும். வருகிற ஆகஸ்ட் ஊதியத்தில் பிரிமியம் தொகை பிடித்தம் செய்து கொள்வார்கள். 01.09.2021 முதல் ஒரு வருடத்திற்கு கவலை இல்லை.
காப்பீடு என்பது சேமிப்பு கணக்காக பார்க்க கூடாது. அது அவசர கால பேருதவி, அவ்வளவுதான். ஒன்றிய அரசாங்கத்தின் பிற்போக்கான கொள்கைகளால் BSNL நிறுவனம் இன்று அதன் ஊழியர்களை, நிறுவனத்தின் செலவில் காக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் நாம் இந்த முயற்சியை எடுக்க நேரிட்டது.
ஏற்கனவே நமது இணையத்தில், Whatsapp குழுக்களில் போதிய விவரங்களை பதிவிட்டுள்ளோம். தோழர்களுக்கு மேலும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்பட்டால் மாவட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.
கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், சற்று நேரம் ஒதுக்கி, கூடுதல் முயற்சி எடுத்து, சங்க வித்தியாசம் இல்லாமல் தோழர்களை அனுகி திட்டத்தின் நன்மைகளை விளக்கவும். வருகிற 16.08.2021 க்குள் OPTION கொடுக்க வேண்டும்.
ESSல் விண்ணப்பிக்க தோழர்கள் ஏதேனும் சிரமங்களை சந்தித்தால், உங்கள் HRMS எண் மற்றும் கடவுசொல்லோடு மாவட்ட சங்கத்தை தொடர்பு கொண்டால், மாவட்ட சங்கம் உதவி புரியும்.