15.09.2021 அன்று ”இளம் தொழிலாளர் கருத்தரங்க”த்தினை, BSNL ஊழியர் சங்கம் நடத்துகிறது.
பல பிரச்சனைகளின் மீது ஊழியர்களை பயிற்றுவிக்க, தொழிற்சங்க வகுப்புகள் நடத்த வேண்டிய அவசியத்தை, BSNL ஊழியர் சங்கத்தின் ஹைதராபாத் மத்திய செயற்குழு அழுத்தமாக பதிவு செய்தது. அதன் அடிப்படையில், 2021, செப்டம்பர் 15 அன்று, “இளம் தொழிலாளர் கருத்தரங்கம்” நடத்த மத்திய செயற்குழு முடிவு செய்தது. இந்த கருத்தரங்கம் இணைய வழியில் நடைபெறும்.
இந்த கருத்தரங்கத்தை துவக்கி வைத்து உரையாற்றிட DIRECTOR(HR) திரு அர்விந்த் வட்னேர்கர் ஏற்றுக் கொண்டுள்ளார். இளம் தோழர்களின் பல மனிதவள பிரச்சனைகள், BSNLன் புத்தாக்கத்தின் மீது அவர்களின் கருத்துக்கள் மற்றும் மேலே கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு வலுவான தொழிற்சங்க இயக்கம் தேவை என்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளை, இந்த கருத்தரங்கத்தில் விவாதிக்கப்படும்.
இந்த இணைய வழி கருத்தரங்கத்திற்கான இணைப்பு விரைவில் அனுப்பப்படும். BSNLல் உள்ள அனைத்து இளம் தொழிலாளர்களையும், இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்