மனித வள சீரமைப்பு தொடர்பாக BSNL ஊழியர் சங்கம் மற்றுமொரு கடிதத்தை, CMD BSNLக்கு எழுதியுள்ளது
மனித வள சீரமைப்பு தொடர்பாக பல பிரச்சனைகளை, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. TT, Sr.TOA, JE மற்றும் JTO கேடர்களின் முன் மொழியப்பட்ட எண்ணிக்கைகளின் மீது தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. Sr.TOA மற்றும் ATT கேடர்களை DYING கேடர்களாக அறிவித்த நிர்வாகத்தின் முன்மொழிவையும், BSNL ஊழியர் சங்கம் எதிர்த்தது. அதன் அடிப்படையில், Sr.TOA கேடரை LIVE கேடராக வைத்துக் கொள்ள ஏற்றுக் கொண்ட DIRECTOR(HR), ATT கேடரை LIVE கேடராக வைத்துக் கொள்ள ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே ATT கேடரை LIVE கேடராக வைத்துக் கொள்ள வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியது. இதற்காக ATT கேடரின் கல்வி தகுதியை வேண்டுமெனில் உயர்த்திக் கொள்ளலாம் என BSNL ஊழியர் சங்கம், ஒரு ஆலோசனையையும் முன் வைத்தது. அதற்கு மாற்றாக ஒரு ‘MULTI TASKING CADRE’ ஒன்றை உருவாக்கலாம் என்றும் BSNL ஊழியர் சங்கம் ஆலோசனை முன்வைத்துள்ளது.
விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்ட பின் BSNLல் நிலைமை தெளிவற்று உள்ளதை சுட்டிக்காட்டிய BSNL ஊழியர் சங்கம், சீரமைப்பு தொடர்பாக தற்போது எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும், ஒரு வருட காலத்திர்கு பின், மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், BSNL ஊழியர் சங்கம் வழங்கியுள்ள முன்மொழிவுகளின் மீது விவாதம் நடத்தாமல், TT, Sr.TOA, JE மற்றும் JTO கேடர்களின் எண்ணிக்கைகளின் மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்றும் BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்