ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும் என BSNLEU கடிதம்
01.10.2020, 01.01.2021 மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளில் வரவேண்டிய IDA விகிதத்தை DPE வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நாம் தொடுத்த வழக்கில் ஊழியர்களுக்கு (NON EXECUTIVES) மேற்கண்ட தேதிகளில் இருந்து வரவேண்டிய IDAவை வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. ஆனால், DoTயும், BSNL நிர்வாகமும், அந்த தேதிகளில் வழங்க வேண்டிய IDA அளவை DPE தெரிவிக்கவில்லை என இத்தனை நாட்கள் கூறி வந்த நிலையில், தற்போது DPE, அதனை தெரியப்படுத்தி உள்ளது.
BSNL நிர்வாகம், ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் இருந்து, மாற்றப்பட்ட IDAக்களை அமலாக்க வேண்டும் என நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது . நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ஊழியர்களுக்கு நிலுவையுடன் IDA உயர்வு வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கம் சரியாக கோரியுள்ளது.