2021, செப்டம்பர் 19ஆம் தேதி, காணொளி காட்சி மூலமாக இளம் ஊழியர்களின் கருத்தரங்கத்தை, BSNL ஊழியர் சங்கம் நடத்த உள்ளது. இந்தக் கருத்தரங்கத்தை, BSNLன் DIRECTOR(HR) திரு அர்விந்த் வட்னேர்கர் துவக்கி வைக்க இசைந்துள்ளார். “இளம் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதில், தொழிற்சங்கத்தின் பங்கு” என்ற தலைப்பில், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு உரையாற்ற உள்ளார்.
SNATTA சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் சுரேஷ் குமார் சிறப்புரையாற்ற உள்ளார். அதன் பின் பங்கேற்கும் தோழர்களின் கலந்துரையாடல் நடைபெறும். காணொளி காட்சி மூலமான இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க வேண்டுமென, BSNLன் அனைத்து இளம் ஊழியர்களையும் BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இதற்கான இணைப்பு விரைவில் தெரிவிக்கப்படும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்