2021 அக்டோபர் 1 முதல் தொலை தொடர்பு துறை செயலாளராக திரு K.ராஜாராமன் பதவி ஏற்கிறார்.
தொலை தொடர்பு துறையின் புதிய செயலாளராக திரு K.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய செயலாளர் திரு அன்ஷூ பிரகாஷ், செப்டம்பர் 30ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுகிறார். அமைச்சரவையின் நியமனக் குழுவின் அறிக்கைப்படி, தொலை தொடர்பு துறையின் புதிய செயலாளராக திரு K.ராஜாராமன் அவர்களை அரசாங்கம் நியமித்துள்ளது.
தற்போது அவர், நிதியமைச்சகத்தின், செலவினங்களுக்கான இலாகாவின் கூடுதல் செயலராக பணியாற்றி வருகின்றார். தமிழ்நாட்டை சார்ந்த திரு K.ராஜாராமன், 1989ஆம் ஆண்டு IASஆக வெற்றி பெற்றவர்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்