29.09.2021 அன்று சேலம் மாவட்ட BSNLEU சங்க அலுவலகத்தில், BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு "அமைப்பு கூட்டம்" நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த தோழர் P. ராமசாமி (AIBDPA) தலைமை தாங்கினார்.
சேலம் மாவட்ட BSNLEU சங்க செயலர் தோழர் E. கோபால், மத்திய மாநில ஒருங்கிணைப்பு குழுவின் முடிவுகள், அமைப்பின் நோக்கம், குழுவின் அமைப்பு முறைகளை அறிமுகப்படுத்தி, மத்திய மாநில சங்கங்களின் வழி காட்டுதல்படி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், கன்வீனர், உறுப்பினர்களின் பெயர்களை முன்மொழிந்தார். தோழரின் முன் மொழிவுகளை கூட்டம் ஏகமனதாக ஏற்று கொண்டது.
அதன்படி, தோழர் M. மதியழகன் (மாவட்ட செயலர், AIBDPA) குழுவின் தலைவராகவும், தோழர் E. கோபால் (மாவட்ட செயலர், BSNLEU) கன்வீனராகவும், தோழர் M. செல்வம் (மாவட்ட செயலர், TNTCWU) இணை கன்வீனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குழுவின் உறுப்பினர்களாக தோழர் S. தமிழ்மணி, மாநில உதவி செயலர், BSNLEU, S. ஹரிஹரன், மாவட்ட தலைவர், BSNLEU, P. ராமசாமி மாவட்ட தலைவர், AIBDPA , K. ராஜன் மாவட்ட தலைவர், TNTCWU ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக, வருகிற 05.10.2021அன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய பேரணியை, நமது சேலம் மாவட்டத்தில், சக்திமிக்கதாக நடத்துவது என்றும், 3 சங்கங்கள் சார்பாக, 200 தோழர்களை திரட்டுவது என்றும், சேலம் ராமகிருஷ்ண பூங்கா அருகில் தோழர்களை திரட்டி, GM அலுவலகம் நோக்கி பேரணியாக செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
இந்த அமைப்பு கூட்டத்தில் தோழர்கள் T. பழனி, மாவட்ட உதவி செயலர், AIBDPA, P. தங்கராஜு, மாவட்ட பொருளர், BSNLEU, M. சண்முகம் மாவட்ட உதவி செயலர், BSNLEU, C. பாஸ்கர், மாவட்ட பொருளர், TNTCWU, P. செல்வம், மாவட்ட அமைப்பு செயலர், BSNLEU, A. கந்தசாமி, BSNLEU கிளை செயலர், இளம்பிள்ளை, D. சுப்பிரமணி BSNLEU கிளை செயலர், STR ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தோழமையுடன்,
E. கோபால், BSNLEU
M. மதியழகன், AIBDPA
M. செல்வம் , TNTCWU
சேலம் மாவட்ட செயலர்கள்