29.09.2021 அன்று சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம், மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர், தலைமை தாங்கினார். தோழர் M. சண்முகம், மாவட்ட உதவி செயலர், அஞ்சலியுறை நிகழ்த்த, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் K. ராஜன் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையுரை, ஆய்படு பொருள் ஏற்புக்கு பின், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் E. கோபால், மாவட்ட செயலர், விளக்கவுரை வழங்கினார். சேலம் மாவட்ட TNTCWU செயலர் தோழர் P. செல்வம் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் கிளை செயலர்கள் விவாதத்தில் பங்கு பெற்றனர். மாவட்ட செயலரின் தொகுப்புரைக்குப்பின் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
வருகிற 05.10.2021 அன்று ஒருங்கிணைப்பு குழு சார்பாக நடைபெறவுள்ள சார்பாக பேரணியை சக்திமிக்கதாக நடத்துவது, 22.10.2021 அன்று சென்னையில் நடைபெறவுள்ள பேரணியில் வாகன ஏற்பாடோடு பெருவாரியான தோழர்கள் கலந்து கொள்வது, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் செயற்குழுவை சேலத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் நடத்துவது, நவம்பர் இறுதிக்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது, டிசம்பரில் மாவட்ட மாநாட்டை நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது
மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு, கருத்துரைக்கு பின், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P. செல்வம், நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.