Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, October 24, 2021

வரலாறு படைத்த பிரம்மாண்ட மனித சங்கிலி போராட்டம்


BSNLEU - AIBDPA - TNTCWU  சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் முடிவின் அடிப்படையில், 22.10.2021 அன்று நாடு முழுவதும், மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகங்கள் நோக்கி பேரணி செல்ல அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும்,  மனித சங்கிலி போராட்டமும் அதனை தொடர்ந்து பெருந்திரள் தர்ணா இயக்கம் நடத்த தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழு முடிவு எடுத்தது.

அதன்படி, 22.10.2021 அன்று , சென்னை CGM அலுவலகத்தில், மனித சங்கிலி மற்றும் பெருந்திரள் தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.  மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 700 தோழர்கள் திரளாக இயக்கத்தில் கலந்து கொண்டார்கள். நமது சேலம் மாவட்டத்திலிருந்து 62 தோழர்கள், தனி வாகன ஏற்பாடாடோடு கலந்து கொண்டோம்.

சேலம் மாவட்டம் சார்பாக, இயக்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு BSNLEU - AIBDPA - TNTCWU மாவட்ட சங்கங்கள் சார்பாக நெஞ்சு நிறை நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

தோழமையுடன் 
E. கோபால்,
ஒருங்கிணைப்பு குழு கன்வீனர்
மற்றும் மாவட்ட செயலர் BSNLEU