BSNLEU - AIBDPA - TNTCWU ஒருங்கிணைப்பு குழு சார்பாக, ஓய்வூதியர்கள், பணியில் உள்ள ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 05.10.2021 அன்று BA / SSA தலைநகரங்களில் பேரணி நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நமது சேலம் மாவட்டத்தில், காவல் துறை அனுமதி இல்லை என்றாலும், சேலம் GM அலுவலகம் அருகில் உள்ள சாலையிலிருந்து, பேரணியாக நாம் வந்து, GM அலுவலகத்தில் சக்திமிக்க தர்ணா போராட்டத்தை நடத்தினோம்.
AIBDPA அமைப்பின் மூத்த தோழர் P. ராமசாமி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற தர்ணா போராட்டத்திர்ற்கு, ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தோழர் M. மதியழகன் தலைமை தாங்கினார். தர்ணா போராட்டத்தை BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி, முறைப்படி துவக்கி வைத்தார்.
TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர், AIBDPA மாவட்ட தலைவர் தோழர் P. ராமசாமி, BSNLEU மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன் TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆகியோர் கண்டன விளக்கவுரை வழங்கினார்கள். ஒருங்கிணைப்பு குழுவின் கன்வீனரும், BSNLEU சேலம் மாவட்ட செயலருமான தோழர் E. கோபால் கண்டன பேருரை வழங்கினார்.
BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். மழை காரணமாக இருக்கை ஏற்பாடு செய்யாத போதும், தோழர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பொறுமையாக கலையாமல் போராட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பம்சம்.
இயக்கத்தை வெற்றி பெற செய்ய முயற்சி மேற்கொண்ட BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்களை மனதார பாராட்டுகிறோம். ஒருங்கிணைப்பு குழு சார்பாகவும் மூன்று மாவட்ட சங்கங்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
மழை அச்சுறுத்தல் இருந்த போதும், "ஒரு கூட்டு பறவைகளாக" நீண்ட நாட்களுக்கு பிறகு, கரம் கோர்த்து, முஷ்டி எழுப்பி, ஆக்கிரோஷமாக போராட்ட களம் கண்ட தோழர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.