IDAவை நிறுத்தி வைத்து அரசாங்கம் அறிவித்தவுடன், BSNL ஊழியர் சங்கம் தான் அதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் போராடியது. 01.10.2020 முதல் IDAவை பெறுவதற்கான நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றது BSNL ஊழியர் சங்கம் தான் என்பதை அனைவரும் அறிவர். எனினும், IDA நிலுவை தொகையை வழங்குவதை, CMD BSNL தாமதம் செய்தார்.
07.10.2021 அன்று அதற்கு ஒப்புதல் வழங்கி விட்டதாக CMD BSNL அறிவித்துள்ளார். BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்திய போதும், ஏன் இவ்வளவு நீண்ட நாட்கள், அவர் நிலுவை தொகையை வழங்க கால தாமதப்படுத்தினார்? இப்போதும், நிலுவை தொகை எப்போது வழங்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது.
BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, 07.10.2021 அன்று, கார்ப்பரேட் அலுவலகத்தின் GM(EF) மற்றும் GM(CCB) ஆகியோரை சந்தித்து, இது தொடர்பாக விவாதித்தார். ஆனால் நிலுவை தொகை எப்போது வழங்கப்படும் என்பதை அவர்களால் கூற முடியவில்லை. IDA நிலுவை தொகையை விரைவில் பெற்று தருவதற்கு BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்