Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, November 3, 2021

09.11.2021 அன்று கிளைகளில் ஆர்ப்பாட்டம்


தேசிய பணமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் 14,917 டவர்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மேலும் BSNL மற்றும் MTNL டவர்களையும், ஆப்டிக் ஃபைபர் கேபிள்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் 40,000 கோடி ரூபாய்களை திரட்டுவது என இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கையில், மத்திய அரசாங்கம் முன் மொழிந்துள்ளது. எனவே, BSNLன் ஆப்டிக் ஃபைபர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது தான் அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்.

BSNLன் மொபைல் டவர்களையும், ஆப்டிக் ஃபைபர் களையும் தனியாருக்கு தாரைவார்ப்பது என்பது, தொலை தொடர்பு துறையில் இருந்து BSNL நிறுவனத்தை அப்புறப்படுத்தும் அரசின் சதித்திட்டத்தின் ஒரு பகுதி. தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில், மத்திய அரசாங்கம் தேசத்தின் சொத்துக்களான, ரயில் வண்டிகள், தண்டவாளங்கள், சாலைகள், எரிவாயு குழாய்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவைகளை, அடிமாட்டு விலைக்கு உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது.

26.10.2021 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற BSNLEU- AIBDPA -BSNL CCWF(TNTCWU)வின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக, 09.11.2021 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள இதர சங்கங்களையும் இணைத்து, இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

நமது சேலம் மாவட்டத்தில் 09.11.2021 அன்று கிளைகளில் சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கிளை சங்கங்களை மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.  

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல் மத்திய மாநில சங்கங்கள்