AUAB தலைவர்கள் மற்றும் CMD BSNL ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட உடன்பாட்டின் தொடர்ச்சியாக, ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தைக் குழுவின் கூட்டம், 18.11.2021 அன்று நடைபெற்றது. திரு R.K. கோயல் PGM (Pers) தலைமையேற்றார்.
BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக தோழர் அனிமேஷ் மித்ரா President, தோழர் P.அபிமன்யு GS, தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS, தோழர் P.அசோகா பாபு Ex VP மற்றும் தோழர் சந்தோஷ் குமார் CS Kerala ஆகியோரும், NFTE சார்பாக தோழர் இஸ்லாம் அஹமது President, தோழர் சந்தேஸ்வர் சிங் GS மற்றும் தோழர் K.S.சேஷாத்ரி Dy.GS ஆகியோரும் பங்கேற்றனர்.
திருமிகு அனிதா ஜோஹ்ரி Sr.GM(SR) அனைவரையும் வரவேற்று விவாதத்தை துவக்கி வைத்தார். ஊழியர்களின் ஊதிய மாற்றம் தொடர்பான DPEயின் வழிகாட்டுதல்கள் முதலில் விவாதிக்கப் பட்டன. அன்றைய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் அன்றைய தொலை தொடர்பு துறையின் செயலர் திருமிகு அருணா சுந்தர்ராஜன் ஆகியோரிடம் நடைபெற்ற விவாதங்களையும், ஊழியர்களின் ஊதிய மாற்றம் தொடர்பாக அவர்கள் கொடுத்த உறுதி மொழிகளையும், ஊழியர் தரப்பு தலைவர்கள் நினைவு படுத்தினர்.
ஊழியர்களுக்கு பலன் தரக்கூடிய வகையில், ஊதிய மாற்ற பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும் என அவர்கள் உறுதியாக வலியுறுத்தனர். நிர்வாக தரப்பில், புள்ளி விவரங்களுடன் நிறுவனத்தின் நிதி நிலைமை விளக்கிக் கூறப்பட்டது. ஊதிய மாற்றத்தின் விளைவாக ஊதியக்குறைப்போ, ஊதிய தேக்க நிலையோ வரக்கூடாது என்கிற ஊழியர் தரப்பு தலைவர்களின் கோரிக்கையை நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டது.
விவாதத்திற்கு பின், விவாதங்களை நடத்த தேவையான விவரங்களுடன் வருவதற்கு நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. ஊதிய மாற்றக் குழுவின் அடுத்தக் கூட்டம் 03.12.2021 அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்