அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், கழிப்பறைகள் உட்பட, சிறப்பு பெருந்திரள் தூய்மை பணி நடைபெற வேண்டும் என 12.11.2021 அன்று கார்ப்பரேட் அலுவலகம் ஒரு கடிதம் வெளியிட்டது. அந்தக் கடிதத்தில் எந்த ஒரு இடத்திலும் ஊழியர்கள், தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என குறிப்பிடப்படவில்லை.
எனினும், “பெருந்திரள் தூய்மை பணி” என்ற வார்த்தையில், அதிகப்படியான ஆட்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்கிற தொனி உள்ளது.
ஏற்கனவே, பெரும்பாலான இடங்களில், ஒப்பந்த தொழிலாளர்களையும், தூய்மை பணியாளர்களையும், நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. அவ்வாறு இருக்கையில், பெருந்திரள் தூய்மை பணியினை யார் செய்வது என்று புரியவில்லை. எனவே அது தொடர்பான தேவையான விளக்கங்களை வெளியிட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் DIRECTOR(HR)க்கு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்