Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, November 15, 2021

IDA நிலுவை - BSNLEU கடிதம்


BSNL ஊழியர்களுக்கு IDA நிலுவை தொகையை வழங்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம், 17.02.2021 அன்றே, CMD BSNLக்கு உத்தரவிட்ட பின்னரும், ஊழியர்களுக்கான IDA நிலுவை தொகை வழங்குவதற்கு BSNL நிர்வாகம் அதீத கால தாமதம் செய்து வருகின்றது. நிலுவை தொகை வழங்க வேண்டும் என உத்தரவிடுவதற்கே, BSNL நிர்வாகத்திற்கு எட்டு மாத காலம் தேவைப்பட்டது.

ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்குவதற்கான உத்தரவை நிர்வாகம், 27.10.2021 அன்று வெளியிட்டது. ஆனால் இன்று வரை ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்பட வில்லை. நிதி இருக்கும் போது தான் நிலுவை தொகை வழங்கப்படும் என, 27.10.2021 அன்று வெளியிட்ட உத்தரவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் நலன்கள் மீது BSNL நிர்வாகத்தின் அக்கறையற்ற போக்கினையே இது காட்டுகிறது. ஊழியர்களுக்கு உடனடியாக IDA நிலுவை தொகையை வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் மீண்டும் ஒரு கடிதத்தை CMD BSNLக்கு எழுதியுள்ளது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்