Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 17, 2021

மாவட்ட செயற்குழு முடிவுகள்


சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் மாவட்ட செயற்குழு,  இன்று (17.12.2021), சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். 

முதல் நிகழ்வாக சங்க கொடியை விண்ணதிரும் கோஷங்களை மத்தியில் மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு ஏற்றி வைத்தார். மாவட்ட உதவி செயலர் தோழர் M. சண்முகம் அஞ்சலியுறை வழங்க, மாவட்ட அமைப்பு செயலர்  தோழர் P. செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி மாவட்ட செயலர் தோழர் E. கோபால் விளக்கவுரை வழங்கினார்.

திறமையாக, சக்திமிக்கதாக, ஒற்றுமையுடன் போராடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற செய்த விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், பொது துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து வங்கி ஊழியர்களின் சிறப்புமிக்க இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.    

TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் வாழ்த்துரை வழங்கியபின், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்குபெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R. முருகேசன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

செயற்குழு முடிவுகள்: 

1. ஏற்கனவே, 27.04.2021 செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 26 கிளைகள், 12 கிளைகளாக இணைக்கப்படும்  .

2. அதற்கு எதுவாக இணைப்பு மாநாடுகள் நடத்தப்படும்.

3. கிளை மாநாடுகள் தேதிகள் முடிவு செய்யப்பட்டது, ஏகமனதாக ஏற்கப்பட்டது. 

4. மாநில சங்க வழிகாட்டுதல் அடிப்படையில், 07.01.2022 அன்று 10 வது மாவட்ட மாநாடு சேலத்தில் நடத்தப்படும்.

5.  மாநில மாநாட்டு நிதியாக ஆயிரம் ரூபாயையும், மாவட்ட மாநாட்டு நிதியாக ஆயிரம் ரூபாயையும், மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் உறுப்பினர்களிடம் நன்கொடை பெறுவது.

6. கிளை மாநாடுகள் நடத்தப்படும் போது நன்கொடைகளை மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது. 

7.  10 வது மாவட்ட மாநாட்டில், ஒரு நிகழ்வாக, பனி நிறைவு தோழர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்துவது.

மேற்கண்ட முடிவுகளை கிளை சங்கங்கள்  முழுமையாக  நிறைவேற்ற வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்