20.12.2021, அன்று பரமத்தி வேலூரில், வேலூர் கிளையின், 10 வது மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் R. குழந்தைசாமி, கிளை தலைவர் தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர் R. ரமேஷ் வரவேற்புரை வழங்கினார்.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி, மாநாட்டை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர், BSNLEU சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P. தங்கராஜு,M. சண்முகம், P. செல்வம், K. ராஜன், பணி நிறைவு பெற்ற மூத்த தோழர் O. ஆறுமுகம், நாமக்கல் நகர கிளை தலைவர் தோழர் R. ராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் E. கோபால் மாநாட்டு சிறப்புரை வழங்கினார். மாநாட்டின் முடிவில், தோழர்கள் R. குழந்தைசாமி, JE தலைவராகவும், R. ரமேஷ், JE செயலராகவும், K. சஞ்ஜீவி பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட, மாநில மாநாடு நிதியாக ரூ.18,000 மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகளின் பனி சிறக்க மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.