BSNLன் மனிதவள சீரமைப்பு திட்டத்திற்கு, BSNL இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கி விட்ட சூழ்நிலையில், நிர்வாகம் இலாகா தேர்வுகளை நடத்த வேண்டும். எனினும், JTO, JE மற்றும் TT கேடர்களில் உள்ள காலிப்பணியிடங்களை பொறுத்தே இந்த தேர்வுகள் நடைபெறும். இந்த பதவிகளுக்கான ROSTERகளை உருவாக்க வேண்டும் என, கார்ப்பரேட் அலுவலகத்தின் ESTABLISHMENT பிரிவு, அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.
BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா ஆகியோர், 07.12.2021 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தின் PGM(Pers) திரு R.K.கோயல் மற்றும் Sr.GM(Estt) திரு சௌரப் தியாகி ஆகியோரை சந்தித்து, இலாகா தேர்வுகள் மேலும் கால தாமதமாகக் கூடாது என்பதால், காலிப்பணியிடங்கள் தொடர்பாக விவாதித்தனர்.
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, அந்த இரண்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்