Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, December 26, 2021

அசத்தலான ஆத்தூர் மாநாடு


24.12.2021, மாலை, ஆத்தூர் நகர, ஊரக, வாழப்பாடி கிளைகள் இணைந்த, 10வது மாநாடு, ஆத்தூரில், சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு நகர கிளை தலைவர் தோழர் P.  குமாரசாமி தலைமை ஏற்க, மாவட்ட செயலர் தோழர் E. கோபால், விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, சங்க கொடியை ஏற்றி வைத்தார். வாழப்பாடி கிளை செயலர் தோழர் M. சேகர் அஞ்சலியுறை நிகழ்த்த, ஊரக கிளை செயலர் தோழர் G. R. வேல்விஜய் அனைவரையும் வரவேற்றார். 

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தோழர் S. தமிழ்மணி,  தமிழ் மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர் P. தங்கராஜு, மாவட்ட பொருளர், கருத்துரை வழங்க,  தோழர் E. கோபால், மாவட்ட செயலர், மாநாட்டு சிறப்புரை வழங்கினார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, ஆத்தூர் கிளை தலைவர் தோழர் P. குமாரசாமி, OS, வாழப்பாடி கிளை தலைவர் தோழர் N. மூர்த்தி, TT  மற்றும் சென்ற மாநாட்டிற்கு பிறகு பணி நிறைவு செய்த தோழர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர்களின் இயக்க பணிகளை நினைவு கூர்ந்து தோழர்களை கௌரவப்படுத்தினார்.  

பின்னர் நடைபெற்ற பொருளாய்வு குழுவில், செயல்பாட்டு அறிக்கை, நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்கப்பட்டது. புதிய  நிர்வாகிகள் தேர்வில், 3 கிளைகள் அமைப்பு ரீதியாக, ஒன்றாக இணைக்கப்பட்டு, தோழர் M. சேகர், TT, தலைவராகவும், தோழர் A. அருள்மணி, TT செயலராகவும், தோழர் S. K. சுப்பிரமணியன், TT பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் K. ராஜன், P. செல்வம், ஆகியோர் வாழ்த்தி, வாழ்த்துரை வழங்கினார்கள். மாநாட்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டபின், புதிய கிளை செயலர் தோழர் A. அருள்மணி,  நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார். 

பட்டாசு வெடியுடன் கொடியேற்றம், மகளிர் தோழர்களின் சிறப்பான ரங்கோலி கோலங்கள், நுழைவு வாயில் முதல் கொடிகள், ஜண்டாக்கள், 100 சத உறுப்பினர்கள் பங்கேற்பு, செழுமையான அறிக்கை, ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் திரளான பங்கேற்பு, சுவையான சிற்றுண்டி, அன்பான விருந்தோம்பல் என ஆத்தூர் கிளை அசத்தி விட்டது.  

மாநில, மாவட்ட மாநாட்டு நிதி, முதல் தவணை ரூ. 20,000/- வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பணி சிறக்க சேலம் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்