Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 24, 2022

எழுச்சிகரமான 10வது மாநாடு


20.01.2022, அன்று  சேலம் YMCA அரங்கத்தில், நமது மாவட்ட சங்கத்தின் 10வது மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர், தோழர் S.  ஹரிஹரன், தலைமை தாங்கினார்.  முதல் நிகழ்வாக, தேசிய கொடியை, தோழர் K. சித்திரசேனன், TT GM(O) ஏற்றி வைக்க, மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, சங்க கொடியை ஏற்றி வைத்தார். நெஞ்சுரமேற்றும் தியாகிகள் ஸ்தூபிக்கு செவ்வணக்கத்தை உரித்தாகியபின், தோழர்கள் மாநாட்டு அரங்கிற்குள் நுழைந்தனர்.

தோழர் M. சண்முகம், அஞ்சலியுறை வழங்கியபின், மாவட்ட செயலர் தோழர் E. கோபால், அனைவரையும் வரவேற்றார். தலைமையுரைக்கு பின், தமிழ் மாநில செயலர் தோழர் A. பாபு ராதா கிருஷ்ணன், மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். அவர்தம் உரையில், ஒன்றிய அரசின் பொதுத்துறை விரோத கொள்கைகள், அதன் வெளிப்பாடாக நடைபெறவுள்ள இரண்டு நாள் வேலை நிறுத்தம், தேசிய பணமாக்கல் திட்டம், BSNL நிறுவனம் சந்திக்கும் சவால்கள், ஊழியர் தரப்பு கோரிக்கைகள், மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், VRSக்கு பிந்தைய நிலை, நிதி ஆதாரம், உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார். 

தோழமை சங்கங்கள் சார்பாக, தோழர் K. பன்னீர்செல்வம், SEWABSNL, தோழர் B. மணிகுமார், AIGETOA, தோழர் G. சேகர், SNEA,  தோழர் L. வெங்கட்ராகவன், AIBSNLEA, தோழர் M. மதியழகன், AIBDPA, தோழர் M. கணேசன், AIBSNLPWA, தோழர் M. செல்வம்,  தோழர் C. பாஸ்கர், TNTCWU ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள். 

சேவை கருத்தரங்கில், சேலம் வணிக பகுதி பொது மேலாளர் திருமதி டாக்டர் C. P. சுபா கருத்துரை வழங்கினார். அவரை தொடர்ந்து திரு R. நாகராஜன், துணை பொது மேலாளர் நிதி மற்றும் திரு A. ரூபன் விஜய சிங், உதவி பொது மேலாளர் நிர்வாகம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

தமிழ் மாநில உதவி தலைவரும், நமது மாவட்ட மூத்த தலைவருமான தோழர் S. தமிழ்மணி உள்ளிட்ட தோழர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாநில செயலர், CITU மாவட்ட குழு உறுப்பினர் தோழர் P. ராமமூர்த்தி, ஆகியோர் தோழர்களை கௌரவப்படுத்தினர். அனைத்து  தோழர்கள் சார்பாக தோழர் S. தமிழ்மணி ஏற்புரை வழங்கினார். 

உணவு இடைவேளைக்குப்பின், நடைபெற்ற பொருளாய்வுக்குழுவில், செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்கப்பட்டது.  தமிழ் மாநில செயலர் தோழர் A. பாபு ராதா கிருஷ்ணன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து விளக்கவுரை வழங்கினார். தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P. கிருஷ்ணன், தமிழ் மாநில உதவி செயலர் தோழர் ஈரோடு மணியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்னர் மாநில செயலர், புதிய நிர்வாகிகள் தேர்வை நடத்தி வைத்தார். தோழர்கள் S. ஹரிஹரன், E. கோபால், M. சண்முகம் முறையே, தலைவர், செயலர், பொருளாராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியபின், பொறுப்பில் இருந்து விடுபடும் மாவட்ட சங்க நிர்வாகிகளை மாநில செயலர் கௌரவப்படுத்தினார்.  தோழர் P. செல்வம், புதிய மாவட்ட உதவி தலைவர், நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.

கொரானா கட்டுப்பாட்டு விதிகள் அமுலில் இருந்த போதும், தகுதி ஆய்வு படிவத்திலிருந்து கிடைக்க பெற்ற விவரங்கள் படி,125 சார்பாளர்களும், 30 மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும், 20 தோழமை சங்க நிர்வாகிகளும், 58 பார்வையாளர்களும் (ஒப்பந்த ஊழியர்கள் / ஓய்வூதியர்கள்)  என 233 தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.

வரவேற்பு குழு தோழர்களும், கொடிகள், தோரணங்கள், சுவையான உணவு, சமூக இடைவெளியுடன் இருக்கைகள், வரவேற்பில் முகக்கவசம், கிருமி நாசினி வழங்குதல் உள்ளிட்ட அணைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர். வரவேற்பு குழு தோழர்களுக்கு பாராட்டுக்கள்.

மாநாட்டில் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றிகள். தோழர்களின் வருகையை உத்திரவாதப்படுத்திய கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்களுக்கு பாராட்டுக்கள். அணைத்து அம்சங்களிலும் மாநாடு சிறப்பாக இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்
E. கோபால், 
மாவட்ட செயலர்

10 வது மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல்