Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, January 13, 2022

உற்சாகமாக நடைபெற்ற நகர கிளைகள் இணைந்த மாநாடு


04.01.2022, அன்று, சேலம் நகர கிளைகளின் இணைந்த 10வது மாநாடு, மாவட்ட சங்க அலுவலகத்தில், உற்சாகமாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் M. பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பு செயலர் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக சங்க கொடியை, தோழர் D. சுப்பிரமணி, STR விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். தோழர் C. மாணிக்கம், JE அஞ்சலியுறை வழங்க,  தோழர் P. பத்மநாபன் பொறுப்பு கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார். 

தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர் E. கோபால் மாவட்ட செயலர் மாநாட்டு சிறப்புரை வழங்கினார்.

மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் K. ராஜன், P.  செல்வம், R. முருகேசன், GM  அலுவலக கிளை தலைவர் தோழர் N. பாலகுமார், கிளை செயலர் தோழர் R. ஸ்ரீனிவாசராஜு, திருச்செங்கோடு கிளை செயலர் தோழர் V. பரந்தாமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

பொருளாய்வு குழுவில், செயல்பாட்டு அறிக்கை,  வரவு செலவு அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. அம்மாபேட்டை, ஏற்காடு, இளம்பிள்ளை, இரும்பாலை, STR, TRA, CSC, கொண்டலாம்பட்டி கிளைகள்,  சேலம் மெயின், செவ்வாய்பேட்டை, மெய்யனுர் கிளைகளுடன்  இணைக்கப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், சேலம் மெயின் கிளைக்கு  தோழர்கள் C.  மாணிக்கம் , JE தலைவராகவும், P.  பத்மநாபன், TT செயலராகவும், C. லாவண்யா, AOS  பொருளாராகவும்,  செவ்வாய்பேட்டை கிளைக்கு  தோழர்கள் B.  வீரேஷ்குமார் , JE தலைவராகவும், N.  சிவகுமார், TT செயலராகவும், K. லோகநாதன், TT  பொருளாராகவும், மெய்யனுர் கிளைக்கு தோழர்கள் M.  செல்வகுமார் , JE தலைவராகவும், M.  ஜோதிசிவம், TT செயலராகவும், P. சந்திரன் , JE  பொருளாராகவும்,  கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

செவ்வை கிளை செயலர் தோழர் N. சிவகுமார், நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். மாநில மாவட்ட மாநாட்டு நிதி ரூ11,000/- வழங்கப்பட்டது. சுவையான சிற்றுண்டி அன்பாக பரிமாறப்பட்டது. கொடிகள், ஜண்டாக்கள் என விளம்பரங்கள் சிறப்பாக இருந்தது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, சேலம் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்   

குறிப்பு :

தொடர்ச்சியான மாவட்ட மாநாட்டு பணிகள் காரணமாக இந்த பதிவு தாமதமாக பதிவிடப்படுகிறது, தாமதத்திற்கு வருந்துகிறோம்.