LIC, PLI, கூட்டுறவு சங்கங்கள், மனமகிழ் மன்றங்கள் உள்ளிட்டவைகளுக்கு, ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதை நிறுத்த வேண்டுமென கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் வெளியிட்டுள்ளது.
நிர்வாகத்தின் இந்த முடிவின் பின்னணி என்ன என்பது நமக்கு புரியவில்லை. இந்த அமைப்புகளுக்கு, ஊழியர்கள் செலுத்த வேண்டிய பணத்தை, சல்லிக்காசு விடாமல் நிர்வாகம், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்கிறது. அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை மட்டுமே, அந்த நிறுவனங்களுக்கு நிர்வாகம் வழங்குகிறது. இது தான் நிலை என்றுள்ள போது, இதில் நிர்வாகத்திற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று தெரியவில்லை.
எனவே, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்