Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, February 21, 2022

24.02.2022 அன்று கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடத்திடுக


IDA நிலுவை தொகை வழங்காதது மற்றும் ஊழியர்களுக்கான JTO, JAO, JE மற்றும் TT பதவி உயர்வுகள் மறுப்பு - 24.02.2022 அன்று கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடத்திடுக!


BSNL ஊழியர்களுக்கு IDAவை நிறுத்தி வைத்தது தவறு என்றும், நிறுத்தி வைக்கப்பட்ட IDAவை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேரள உயர்நீதி மன்றம், 17.02.2021 அன்று தீர்பளித்தது. அந்த உத்தரவு வழங்கப்பட்டு ஒரு வருட காலம் முடிந்து விட்டது. 01.10.2020, 01.01.2021 மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளில் உயர்ந்த IDA விகிதங்களை, 02.08.2021 அன்று DPE வெளியிட்டது. DPE உத்தரவு வெளியிட்டு 6 மாதங்கள் கடந்து விட்டது. ஆனாலும், ஊழியர்களுக்கு, IDA நிலுவை தொகை வழங்குவதை, CMD BSNL, வேண்டும் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்.

மேலும் பதவி உயர்வில், BSNL நிர்வாகம், ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது. அதிகாரிகளின் பதவி உயர்விற்கு, 31.01.2020 அன்று (VRS திட்டம் அமலாக்கப்படும் முன்) இருந்த காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டது. ஆனால் ஊழியர்களின் பதவி உயர்வை பொருத்த வரை, JTO, JE மற்றும் TT கேடர்களில், 31.01.2020 அன்று இருந்த பெரும்பாலான காலிப்பணியிடங்களை, சீரமைப்பு என்ற பெயரில், நிர்வாகம் ரத்து செய்து விட்டது. தற்போது, JTO இலாகா தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல மாநிலங்களில், ஒரு காலிப் பணியிடம் கூட இல்லை. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில், ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே காலிப்பணியிடங்கள் உள்ளன. JE மற்றும் TT இலாகா தேர்வுகளிலும் இதே நிலைதான் நீடிக்கும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் JAO தேர்வு விதிகளில், எந்த ஒரு Sr.TOAவும் JAOவாக மாற முடியாத வண்ணம், கடுமையான கட்டுப்பாடுகள் திணிக்கப் பட்டிருக்கிறது. அதே போன்று, E-OFFICE முறையில், ஊழியர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். Sr.TOA கேடரில் உள்ள ஊழியர்களுக்கு, அதற்கான கடவுச்சொல் (PASSWORD) வழங்கப்படவில்லை. 20% Sr.TOAக்களில் E-OFFICE முறையில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என்கிற DIRECTOR(HR) கொடுத்த வாக்குறுதி, அமலாக்கப்படவில்லை.

எனவே, 18.02.2022 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின், அகில இந்திய மையக் கூட்டத்தில், இந்த கோரிக்கைகளுக்காக, 24.02.2022 அன்று சக்தி வாய்ந்த உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. இந்த மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில், பெரும்பாலான ஊழியர்களை திரட்டி, கிளைகளில் வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என சேலம் மாவட்ட சங்கம்  கேட்டுக் கொள்கிறது

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர்