02.02.2022 அன்று, சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் "மாவட்ட சங்க நிர்வாகிகள்" கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர், தலைமை தாங்கினார். தோழர் N. பாலகுமார், மாவட்ட உதவி செயலர் அனைவரையும் வரவேற்றார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் E. கோபால், மாவட்ட செயலர், விளக்கவுரை வழங்கினார்.
10வது மாவட்ட மாநாடு சம்மந்தமான பரிசீலனை நடைபெற்றது. அடுத்து, "கிளை செயலர்கள்" கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு, மாவட்ட செயற்குழுவை, மார்ச் முதல் வாரத்தில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. மாநாட்டு நிதி நிலுவை வைத்துள்ள கிளைகள் ஒரு வார காலத்திற்குள் நிலுவையை வசூலித்து மாவட்ட சங்கத்திடம் வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில், வேலை பகிர்வினை என்கிற அடிப்படையில், புதிய மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு, "கிளைகள்" ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட கிளைகளுக்கு சென்று, 28.02.2022க்குள் கிளை கூட்டங்களை நடத்தி, மாவட்ட சங்கத்திற்கு தகவல் தெரிவிக்க முடிவு எடுக்கப்பட்டது.
தோழர்களின் "பொறுப்பு கிளைகள்" பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. மாத மாதம் கிளை கூட்டங்கள் நடத்துவது, கிளைகளில் இயக்கங்களை வெற்றிகரமாக்குவதற்கு, கிளை செயலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகளை, முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.