சேலம் மாவட்ட BSNLEU - TNTCWU சங்கங்களின் மைய கூட்ட முடிவின் அடிப்படையில், ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சனைக்காக, 18.02.2022 அன்று சேலம் GM அலுவலகத்தில் சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்திற்கு, தோழர்கள் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர், BSNLEU, K. ராஜன், மாவட்ட தலைவர், TNTCWU கூட்டு தலைமை தாங்கினார்கள்.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி, TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர், TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால் ஆகியோர் கண்டன பேருரை வழங்கினார்கள்.
ஒப்பந்த ஊழியர்களுடன் நிரந்தர ஊழியர்கள் ஓய்வூதியர்களும் திரளாக கலந்து கொண்டு கோபக்கனலுடன் ஆவேச முழக்கங்களை எழுப்பினர். BSNLEU மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம் நன்றி கூறி இயக்கத்தை முடித்து வைத்தார்.
பின்னர் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஒரு வார காலத்திற்குள், பிரச்சனைக்கு தீர்வு காண ஒப்பந்தத்தருடன் பேசுவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU