BSNLEU - AIBDPA - TNTCWU ஒருங்கிணைப்பு குழு சார்பாக, மத்திய சங்கங்களின் அரைகூவலுக்கிணங்க, 18.02.2022 அன்று, சேலம் மாவட்டத்தில், தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. தோழர்கள் S. ஹரிஹரன் (BSNLEU), M. மதியழகன் (AIBDPA), K. ராஜன் (TNTCWU) கூட்டு தலைமை ஏற்றனர்.
AGM SALES மற்றும் SNEA மாவட்ட செயலர் தோழர் G. சேகர் முதல் கையெழுத்திட்டு, இயக்கத்தை துவக்கி வைத்தார்.
BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், AIBDPA மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், TNTCWU மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர், DE TCD மற்றும் SNEA மாவட்ட பொருளர் தோழர் P. பொன்ராஜ் ஆகியோர் இயக்கத்தின் நோக்கங்களை விளக்கி சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து நிரந்தர ஊழியர்கள், ஓய்வூதியர், ஒப்பந்த ஊழியர் என 100க்கும் மேற்பட்ட தோழர்கள் இயக்கத்தில் திரளாக கலந்து கொண்டனர். கிளைகளில் இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.