மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்ட முடிவின் அடிப்படையில், GM அலுவலக கிளை கூட்டம் 23.02.2022 அன்று GM அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் R. ஸ்ரீனிவாசன், கிளை உதவி தலைவர் மற்றும் மாவட்ட அமைப்பு செயலர். தோழர் R. ராதாகிருஷ்ணன் தணிக்கையாளர் அனைவரையும் வரவேற்றார். கிளை செயலர் தோழர் R. ஸ்ரீனிவாசராஜு, ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
மாவட்ட தலைவரும், GM அலுவலக மாவட்ட பொறுப்பாளருமான, தோழர் S. ஹரிஹரன், கூட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P. செல்வம், K. ராஜன், D. கவிதா, R. முருகேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில் தள மட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது. இறுதியாக, மாவட்ட செயலர் தோழர் E. கோபால் சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில் 28.03.2022, 29.03.2022 இரண்டு நாள் வேலை நிறுத்தம் மற்றும் 24.02.2022 நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில், அனைவரும் முழுமையாக கலந்து கொள்ள அறைகூவல் விடுத்தார்.
இனி, மாத மாதம் கூட்டத்தை நடத்துவது என கிளை சங்கம் முடிவு எடுத்தது. 25 உறுப்பினர்ககளில், 22 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பம்சம். தள மட்ட பிரச்சனைகள் சம்மந்தமாக, கிளை சங்கம் நிர்வாகத்தை 25.02.2022 அன்று சந்திக்கும்.
கிளை பொருளர் தோழர் R. முருகேசன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். GM அலுவலக கிளையின் பணி சிறப்பாக தொடர, மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.