LIC நிறுவனத்தின் பங்கு விற்பனையை எதிர்த்து, காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று (05.03.2022) மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எல்ஐசி பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் வெற்றி பெற சேலம் மாவட்ட BSNLEU சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து, இயக்கத்தில் தோழர்களுடன் கலந்து கொண்டோம்.