Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, March 2, 2022

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த AUAB அறைகூவல் - கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடத்திடுக!


81 ஏக்கர் நிலத்தோடு, சுமார் 6,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டுள்ள ALTTCயை, கையகப்படுத்திக் கொள்வதாக, தன்னிச்சையாக DoT, 21.02.2022 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. உடனடியாக, காணொளி காட்சி மூலம், 24.02.2022 அன்று கூடிய AUAB, DoTயின் இந்த சட்டாம்பிள்ளைத்தனமான உத்தரவுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. அதற்கு பின், ALTTC, BSNL வசமே தொடரும் என 25.02.2022 அன்று DoT மற்றொரு கடிதத்தை வெளியிட்டது. ஆனால், 21.02.2022 அன்று போட்ட உத்தரவை, DoT ரத்து செய்யவில்லை.

மேலும், நாட்டின் பல பகுதிகளில், BSNLன் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களை, DoT, தன்னிச்சையாக கையகப்படுத்திக் கொள்கிறது. DoTயின் இந்த சட்டாம்பிள்ளைத்தனம், தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

எனவே, 03.03.2022 அன்று உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என, AUAB அறைகூவல் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில், 03.03.2022 அன்று கிளைகளில், AUAB அமைப்பில் உள்ள சங்கங்களை ஒருங்கிணைத்து, போராட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

நகர கிளைகள் சார்பாக, AUAB சங்கங்களின் (BSNLEU - AIGETOA - SNEA - AIBSNLEA) இணைந்த போராட்டம், சேலம் GM அலுவலகத்தில், மதியம் 12.30 மணி அளவில்,  நடைபெறும்.

தோழமையுடன் 
E. கோபால்,  
கன்வீனர் AUAB 
மற்றும் மாவட்ட செயலர், BSNLEU