BSNL ஊழியர் சங்கம் எடுத்த முயற்சிகளின் காரணமாக, விருப்பப்படும் ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், 01.05.2022 முதல் அமலாக உள்ளது. ORIENTAL INSURANCE COMPANY LIMITED தான் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய கடிதத்தை, கார்ப்பரேட் அலுவலகம், 08.04.2022 அன்று வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் படி, இதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கான ERP/ESS PORTALகளில், சாளரங்கள், 12.04.2022 திறக்கப்படும்.
இதற்கான விருப்பம் தெரிவிப்பதற்கான கடைசி தேதி 18.04.2022.
தெரிவித்த விருப்பங்களை, திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி 21.04.2022.
6) விருப்பம் தெரிவித்தவரகள், தங்கள் விருப்பத்தை 19.04.2022 முதல் 21.04.2022 வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
7) இதற்கான வருடாந்திர ப்ரீமியம் தொகை, ஊழியர்களின் ஏப்ரல் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
8) 5 லட்ச ரூபாய்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில், பணியில் உள்ள அனைத்து ஊழியர்களும் இணைந்து கொள்ளலாம். அதற்கான வருடாந்திர ப்ரீமியம் தொகை கீழ்கண்டவாறு:-
விருப்பம் 1) கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோருக்கு- ரூ.16,041/-
விருப்பம் 2) கணவன், மனைவி, 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.25,814/-
விருப்பம் 3) கணவன், மனைவி, 3 குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ35,804/-
விருப்பம் 4) கணவன் மற்றும் மனைவிக்கு மட்டும் - ரூ.15,233/-
விருப்பம் 5) கணவன், மனைவி மற்றும் ஒரு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.25,005/-
விருப்பம் 6) கணவன், மனைவி மற்றும் இரண்டு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.34,995/-
9) 10 லட்ச ரூபாய்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில், பணியில் உள்ள 01.05.2022 அன்று E5 மற்றும் அதற்கு மேற்பட்ட ஊதிய விகிதத்தில் உள்ள ஊழியர்கள் மட்டும் இணைந்து கொள்ளலாம். வருடாந்திர ப்ரீமியம் தொகை கீழ்கண்டவாறு:-
விருப்பம் 7) கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோருக்கு- ரூ.24,061/-
விருப்பம் 8) கணவன், மனைவி, 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.38,721/-
விருப்பம் 9) கணவன், மனைவி, 3 குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.53,705/-
விருப்பம் 10) கணவன் மற்றும் மனைவிக்கு மட்டும் - ரூ.22,858/-
விருப்பம் 11) கணவன், மனைவி மற்றும் ஒரு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.37,517/-
விருப்பம் 12) கணவன், மனைவி மற்றும் இரண்டு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.52,502/-
10) 5 லட்ச ரூபாய் காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 5 லட்ச ரூபாய்களுக்கு Top Up செய்து கொள்வதற்கான கட்டணங்கள் வருமாறு:-
விருப்பம் 1) கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோருக்கு- ரூ.6,417/-
விருப்பம் 2) கணவன், மனைவி, 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.10,325/-
விருப்பம் 3) கணவன், மனைவி, 3 குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ14,322/-
விருப்பம் 4) கணவன் மற்றும் மனைவிக்கு மட்டும் - ரூ.6,096/-
விருப்பம் 5) கணவன், மனைவி மற்றும் ஒரு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.10,004/-
விருப்பம் 6) கணவன், மனைவி மற்றும் இரண்டு பெற்றோர் ஆகியோருக்கு- ரூ.14,001/-
11) ஒரு பெற்றோர் என்றால், தாய் அல்லது தகப்பன் அல்லது மாமனார் அல்லது மாமியார், யாராவது ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம்.
12) இரண்டு பெற்றோர் என்றால் 'தாய் மற்றும் தகப்பன்' அல்லது 'மாமனார் மற்றும் மாமியார்' ஆகியவர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
13) குழந்தைகள் என்றால் 25 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமே சேர்க்க இயலும். அதாவது 01.05.1997க்கு பின் பிறந்த குழந்தைகள் மட்டுமே சேர்த்துக் கொள்ள இயலும்.
14) 85 வயதுக்கு உட்பட்ட பெற்றோர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள இயலும். அதாவது 01.05.1937க்கு பின் பிறந்த பெற்றோர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள இயலும்.
15) இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கும், BSNL MRS திட்டத்திற்கும் தொடர்பு இல்லை. இரண்டும் தனித்தனியானது. BSNL MRS திட்டமும் நடைமுறையில் தொடரும்.
16) இந்த பாலிசி, அமலாக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும். ஓராண்டு காலம் நிறைவுறும் சமயத்தில் இந்த பாலிசி, BSNL நிறுவனத்திற்கும், ORIENTAL ASSURANCE LIMITED நிறுவனத்திற்கும் இடையேயான உடன்பாட்டின் படியும், பிரீமியம் தொகையுடனும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
17) இந்த திட்டத்தில் இணைந்து ஓராண்டுக்குள், பணி ஓய்வு பெரும் தோழர்களுக்கு, இந்த ஓராண்டு இந்த திட்டம் அமலில் இருக்கும். பணி ஓய்விற்கு பின், இதே திட்டத்தில் தொடரலாம். ஆனால், அதற்கான புதுப்பித்தலுக்கான ப்ரீமியம் தொகை, காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஓய்வு பெற்ற நபர்களுக்கு இடையேயானதாக இருக்கும்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்