Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, April 30, 2022

மே தினம் வெல்லட்டும்!


உலக தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!! என்கிற உன்னத கோசத்தின், உள்ளார்ந்த அர்த்தத்தை, வெளிப்படுத்தும் உன்னத நாள் தான் மே தினம். கார்ப்பரேட் வர்க்க சதிகளை முறியடித்து, தொழிலாளர் வர்க்க போராட்டத்தை முன்னெடுக்க, சபதமேற்கும் நன் நாள் தான் மே தினம். நாடு, இனம், மொழி, கலாச்சாரம், நிறம் என எந்த பாகுபாடுமின்றி, வர்க்க குணாம்சத்தோடு உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்கம் ஒரே குரலில், ஒரே கோசத்தில் இணைகின்ற நன் நாள்  தான் மே தினம்.

இந்த வருடம், ஞாயிற்றுக்கிழமை (01.05.2022) அன்று மே தினம் வருகிறது. வழக்கமான உற்சாகத்தோடு கிளைகள் மே தினத்தை கொண்ட வேண்டும் என மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது. தேவை அடிப்படையில், சங்க கொடி கம்பத்தை புதுப்பித்து, புது கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி, ஊழியர்களை திரட்டி, மே தினத்தை எழுச்சியுடன் கொண்டாடுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

01.05.2022 அன்று மாலை, சேலம் மற்றும் நாமக்கல் நகரங்களில் நடைபெறும் அணைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பான பேரணி மற்றும் பொது கூட்டங்களில் நமது தோழர்கள் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின், புரட்சிகர மே தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். 

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்