நாள்: 09.06.2022, வியாழக்கிழமை, காலை 10.30 மணி முதல்
E2/E3 ஊதிய விகித பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும், ஓய்வூதிய பலன்கள் பிரச்சனைதீர்வு காணப்பட வேண்டும், தேவையான காலிப்பணியிடங்களுடன், JTO இலாகா தேர்வினை நடத்த வேண்டும், SC/ST BACKLOG காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் 27.10.2021 அன்று AUAB மற்றும் CMD BSNL ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தரப்பட்ட உறுதி மொழிகளில் தீர்வு காணப்படாத விஷயங்களை உடனடியாக அமலாக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி 09.06.2022 அன்று நாடு தழுவைய தர்ணா போராட்டத்தை நடத்திட AUAB முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், சேலம் மாவட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக்க, சேலம் மாவட்ட AUAB சார்பாக, 09.06.2022 அன்று காலை 10.30 மணி முதல், சேலம் GM அலுவலத்தில் போராட்டம் நடைபெறும்.
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். கிளை சங்கங்கள், போராட்டத்தை வெற்றிகரமாக்க, ஆயுத்தபணிகளை உடனடியாக துவக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.