27.05.2022 - வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி அளவில், சேலம் GM அலுவலகம்
27.04.2022 அன்று புதுடெல்லியில், AUABயின் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, 04.05.2022 மற்றும் 11.05.2022 ஆகிய தேதிகளிலும், காணொளி காட்சி மூலம் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த அனைத்து கூட்டங்களிலும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்குமான ஊதிய மாற்றங்கள், தீர்வு காணப்படாதது தொடர்பாக, மிகுந்த அக்கறையுடன் விவாதிக்கப் பட்டது.
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதிய மாற்றம், E2/E3 ஊதிய விகித பிரச்சனை தீர்வு காணப்படாதது, ஓய்வூதிய பலன்கள் பிரச்சனையில் தீர்வு ஏற்படாதது, JTO இலாகா தேர்வில் மிகக் குறைவான காலிப்பணியிடங்கள், SC/ST BACKLOG காலிப்பணியிடங்கள் நிரப்பபடாதது மற்றும் 27.10.2021 அன்று AUAB மற்றும் CMD BSNL ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தரப்பட்ட உறுதி மொழிகள் அமலாக்கப்படாதது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட களம் காண முடிவு எடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டங்கள், ட்விட்டர் பிரச்சரம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மனு கொடுப்பது மற்றும் சஞ்சார் பவன் நோக்கிய பேரணி உள்ளிட்ட இயக்கங்களுக்கு அறைகூவல் விடுக்க, AUAB முடிவு செய்தது. அதன்படி
1) 27.05.2022 உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்
2) 14.06.2022 ட்விட்டர் பிரச்சாரம்
3) 01.06.2022 முதல் 30.06.2022 வரை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு மனு வழங்குவது.
4) சஞ்சார் பவன் நோக்கிய பேரணி (இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்).
ஊதிய மாற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண, AUAB விடுக்கும் அறைகூவல்களை வெற்றிகரமாக சேலம் மாவட்டத்தில் அமுல்படுத்தும் விதமாக, முதல் கட்ட போராட்டமான, ஆர்ப்பாட்ட போராட்டத்தை, மாவட்டம் தழுவிய அளவில் சேலம் GM அலுவலகத்தில் 27.05.2022, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் நடத்திட, சேலம் மாவட்ட AUAB முடிவு எடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
AUAB சுற்றறிக்கையின் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் கொடுக்கப்பட்ட போராட்ட பிரகடனமும் இணைக்கப்பட்டுள்ளது.