மூன்றாவது ஊதிய மாற்றம், நேரடி நியமன ஊழியர்கள் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, AUAB சார்பாக, முதல் கட்ட போராட்டமான, கண்டன ஆர்ப்பாட்டம், இன்று (27.05.2022), சேலம் GM அலுவலகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர்கள் K. ராஜன் (BSNLEU), V. தியாகராஜன் (AIGETOA), V. குருவாயூர் கண்ணன் (SNEA) V. சண்முகசுந்தரம் ( AIBSNLEA) தலைமை தங்கினார்கள்.
தலைமை குழு தோழர்களின் உரைக்கு பின், BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், SNEA மத்திய குழு உறுப்பினர் தோழர் G. சேகர், AIBSNLEA மாவட்ட உதவி செயலர் தோழர் L. வெங்கட்ராகவன், AIGETOA மாவட்ட பொருளர் தோழர் V. அன்பழகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். சேலம் மாவட்ட AIBDPA செயலர் தோழர் S. தமிழ்மணி, சேலம் மாவட்ட TNTCWU செயலர் தோழர் M. செல்வம், AIBDPA மாநில சங்க நிர்வாகி தோழர் T. பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், AIGETOA மாவட்ட செயலர் தோழர் B. மணிகுமார், SNEA மாவட்ட செயலர் தோழர் K. ஸ்ரீனிவாசன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
BSNLEU மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம், நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில், மாவட்டம் முழுத்தலுமிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். பெண் தோழர்கள் கணிசமாக கலந்து கொண்டது சிறப்பம்சம். ஒப்பந்த ஊழியர்கள் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டது பாராட்டுக்குரியது. இயக்கத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், சேலம் மாவட்ட AUAB சார்பாக நெஞ்சு நிறை நன்றிகள்.
தோழமையுடன்
E.கோபால்,
கன்வீனர், AUAB மற்றும்
மாவட்ட செயலர் BSNLEU
குறிப்பு: அடுத்த கட்ட போராட்டமான தர்ணா போராட்டம், 09.06.2022 அன்று, சேலம் GM அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு துவங்கும்