Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, May 9, 2022

மாவட்ட செயற்குழு முடிவுகள்


சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் மாவட்ட  செயற்குழு கூட்டம், 07.05.2022 அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் P. செல்வம் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜூ  அஞ்சலியுறை நிகழ்த்த, செவ்வை கிளை செயலர் தோழர் N. சிவகுமார் வரவேற்புரை வழங்கினார்.

கூட்டத்தின் ஆய்படு பொருளை செயற்குழு ஏற்றபின், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சங்க நிர்வாகிகள், தோழர்கள் S.ஹரிஹரன், R. ரமேஷ் கௌரவிக்கப்பட்டனர்.

BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர் S. தமிழ்மணி, சேலம் மாவட்ட செயலர், AIBDPA, வாழ்த்துரை வழங்க, தோழர் R. ரமேஷ், மாநில அமைப்பு செயலர் சிறப்புரை வழங்கினார். 

ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் E. கோபால் மாவட்ட செயலர் உரை நிகழ்த்தினார். தோழர் M. செல்வம், சேலம் மாவட்ட செயலர், TNTCWU வாழ்த்துரை வழங்கியபின், செயற்குழு உறுப்பினர்கள் விவாதத்தில் பங்குபெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார்.

வேண்டுமென்றே காலம் கடத்தி, NEPP பதவி உயர்வு வழங்க மறுத்த மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி, NEPP பதவி உயர்வு பெற வழி வகை செய்த மாவட்ட சங்கத்தை பாராட்டி, தோழர் G.R. வேல்விஜய், மாவட்ட உதவி செயலர் ரூ 1000.00 நன்கொடை வழங்கினார்.

10 வது  மாவட்ட மாநாடு வரவு செலவு கணக்கு, சமர்க்கிப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. தணிக்கை செய்யப்படாத, 10 வது மாவட்ட மாநாட்டிற்கு பிந்தைய, மாவட்ட சங்கத்தின் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 

1. இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில், சம்பள வெட்டிற்கு அஞ்சாமல், கலந்து கொண்ட தோழர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது.

2. இனி வரும் காலங்களில், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வில்லையென்றால், சங்க ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட மையத்திற்கு அதிகாரம் வழங்குவது. 

3. 2022 சூன் மாதம் முழுவதும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது.

4.  அனைத்து கிளைகளிலும். கிளை கூட்டங்கள் நடத்துவது. மாவட்ட சங்கம் கிளைகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வது.

5. 15.06.2022 முதல் 12.07.2022 வரை  புதிய உறுப்பினர் படிவங்கள் பெறுவது 

6. கிளை அளவில் BSNLEU - TNTCWU - AIBDPA ஒருங்கிணைப்பு குழுக்களை உருவாக்குவது.

7. BSNLWWCC சேலம் மாவட்ட உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட மாநாட்டை ஒரு மாதத்திற்குள் நடத்துவது. 

8. அடுத்த செயற்குழு கூட்டத்தை 2022 ஜூலை முதல் வாரத்தில் நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

மாவட்ட உதவி செயலர் தோழர் K. ராஜன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.  

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்