ஒப்பந்த ஊழியர் மத்திய கூட்டமைப்பான, BSNLCCWF, நாடு முழுவதும், ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளுக்காக, மூன்று கட்ட போராட்ட இயக்கங்களை, 2022 ஜூன் மாதத்தில் நடத்த அறைகூவல் கொடுத்துள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவையை உடனே வழங்கிடு, அவுட்சோர்சிங் திட்டத்தை (WORK CONTRACT) மறு பரிசீலனை செய், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPF, ESI, MINIMIMUM WAGES, GRATUITY போன்ற அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் அமுல்படுத்தும் விதத்தில் டெண்டர்களை வெளியிடு ஆகிய கோரிக்கைகளுக்காக 17.06.2022 அன்று நாடு முழுவதும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்துள்ளது.
04.06.2022 அன்று நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு கூட்டத்தில், இப்போராட்டங்களில் BSNLEU, AIBDPA சங்கங்கள் ஆதரவளித்து கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (15.06.2022) சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இந்த போராட்ட அறைகூவலை, கிளைகளில் சக்திமிக்கதாக நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நாளை (17.06.2022) வெள்ளிக்கிழமை, மாவட்டம் முழுவதும் உள்ள நமது கிளைகளில் ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தப்ப வேண்டும்.
BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள் இணைந்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.