இடம்: சேலம் GM அலுவலகம்
நாள்: 21.06.2022, செவ்வாய்க்கிழமை, காலை 10.30 மணி முதல்
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சில முக்கியமான பிரச்சனைகளை முன்வைத்து, 09.06.2022 அன்று நாடு தழுவிய தர்ணா போராட்டத்தை நடத்த AUAB முடிவு எடுத்திருந்தது. இருப்பினும், 14 நாட்கள் முறையான அறிவிக்கை வழங்கி இயக்கம் நடத்த வேண்டும் என்பதால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது, 21.06.2022 அன்று போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தர்ணா போராட்டத்திற்கான அறிவிப்பினை, 04.06.2022 அன்று CMD BSNL மற்றும் தொலை தொடர்பு துறையின் செயலருக்கு, AUAB வெளியிட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்ட AUAB சார்பாக, 21.06.2022 அன்று காலை 10.30 மணியிலிருந்து, சேலம் GM அலுவலகத்தில், இந்த போராட்டம் நடைபெறும். முறையான அறிவிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.