ஒவ்வொரு உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு முன்னரும், ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை, BSNL நிர்வாகம் நடத்தும். விண்ணப்பித்துள்ள அனைத்து சங்கங்களும், இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு, உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடத்துவது தொடர்பான தங்களின் கருத்துக்களை தெரிவிக்கும்.
நடைபெற உள்ள 9வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்காக, அதே போன்ற ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தினை நிர்வாகம் நடத்துகிறது. இந்தக் கூட்டம், BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில், 14.06.2022 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு சங்கத்தின் சார்பாகவும், தலா இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்கலாம்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்