Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, June 11, 2022

ஊதிய பேச்சுவார்த்தைக் குழுக் கூட்டம், எந்த ஒரு முடிவும் எடுக்காமல், முடிவடைந்தது


ஊதிய பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டம், 10.06.2022 அன்று நடைபெற்றது.  பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் மற்றும் முன்னாள் கேரள மாநில செயலாளர் தோழர் C.சந்தோஷ் குமார் ஆகியோர், BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக கலந்துக் கொண்டனர்.  

அந்தக் கூட்டத்தில், மேலும் காலதாமதமின்றி, 5% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்துடன், ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும் என, ஊழியர் தரப்பு, வலுவாக கோரியது.  அதே போல, ஏற்கனவே, ஊழியர் மற்றும் நிர்வாக தரப்பிற்கிடையே, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இறுதி செய்த ஊதிய விகிதங்களை மாற்றக்கூடாது என்றும் ஊழியர் தரப்பு கேட்டுக் கொண்டது.

எனினும், கீழ்கண்ட காரணங்களால், 5% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றம் சாத்தியமில்லை என நிர்வாக தரப்பு வாதிட்டது:-

1) BSNL நிறுவனம் நஷ்டத்தில் செயல்படுவதால், 3வது ஊதிய மாற்ற கமிட்டி பரிந்துரையின் படி, BSNL ஊழியர்கள், ஊதிய மாற்றத்திற்கு தகுதி படைத்தவர்கள் அல்ல.

2) ஒவ்வொரு மாதமும், BSNLன் வருவாயிற்கும், செலவுகளுக்கும் இடையே 800 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது.  எனவே, 5% ஊதிய நிர்ணய பலன் சாத்தியமில்லை.

அதன் பின்னர் நீண்ட விவாதங்கள் நடைபெற்றது.  ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 

இறுதியில், கீழ்கண்ட காரணங்களால், 5% ஊதிய நிர்ணய பலனுடன் ஊதிய மாற்றம் வழங்கலாம் என ஊழியர் தரப்பு, கேட்டுக்கொண்டது.

1) BSNL விரைவில் 4G சேவை துவங்க உள்ளதால், வருவாய் கண்டிப்பாக அதிகரிக்கும்.

2) 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையின் மூலம் BSNLன் உயர் அதிகாரிகள் ஊதிய மாற்றம் பெற்று விட்டனர்.  ஆனால் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் மறுக்கப் படுகிறது.  

3) தொலைதொடர்பு சந்தையில் கட்டணங்கள் உயர்ந்து வருகிறது.  அதனை BSNL நிறுவனமும் ஓரளவிற்கு பயன்படுத்தலாம்.  

எந்த ஒரு முடிவும் எடுக்காமல், கூட்டம் முடிவடைந்தது. ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் அடுத்த கூட்டத்தை, உறுப்பினர் சரிபார்ப்பிற்கு முன்னர் நடத்த வேண்டும் என ஊழியர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தோழமையுடன் 
E. கோபால்,
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள் 

.