15.06.2022 அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில், BSNLEU - AIBDPA - TNTCWU சேலம் மாவட்ட சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. தமிழ்மணி ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் தலைமை தாங்கினார். தோழர் S. ஹரிஹரன் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர், வரவேற்புரை வழங்கினார். கூட்டத்தின் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி தோழர் E. கோபால் அமைப்பின் கன்வீனர் கருத்துரை வழங்கினார்.
தோழர்கள் M. செல்வம், C. பாஸ்கர், K. ராஜன் (TNTCWU), T. பழனி, S. மைக்கேல் அந்தோணி, (AIBDPA) P. தங்கராஜு, P. செல்வம், (BSNLEU) ஒருங்கிணைப்பு குழு தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவாதத்தில் பங்குபெற்றனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. BSNLCCWF சம்மேளனத்தின் அறைகூவல்படி 17.06.2022 அன்று 6 மையங்களில் (சேலம், ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், பரமத்தி,வேலூர்), நமது மாவட்ட சூழலுக்கேற்ப ஆர்ப்பாட்டம் நடத்துவது.
2. 21.06.2022 அன்று AUAB போராட்ட அறைகூவல்படி, சேலத்தில் நடைபெறவுள்ள தர்ணா போராட்டத்தில், ஒருங்கிணைப்பு குழு உறுப்பு சங்கங்கள் சார்பாக, மாவட்டம் முழுவதுமுள்ள உறுப்பினர்களை திரட்டி பெருமளவில் கலந்து கொள்வது.
3. 22.06.2022 அன்று AIBDPA அமைப்பின் அறைகூவல்படி, மாவட்டத்தில் உள்ள 5 மையங்களில் (சேலம், திருச்செங்கோடு, ஆத்தூர், நாமக்கல் ராசிபுரம்) ஆர்ப்பாட்டம் நடத்துவது.
4. 27.06.2022 அன்று BSNLCCWF அமைப்பின் போராட்ட அறைகூவல்படி, மாவட்டம் முழுவதுமுள்ள உறுப்பினர்களை திரட்டி, சேலம் GM அலுவலகத்தில் கோரிக்கை பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம் நடத்துவது.
5. 30.06.2022 அன்று BSNLCCWF அமைப்பின் அறைகூவல்படி, சென்னையில் நடைபெறவுள்ள கோரிக்கை பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டத்தில், திரளாக கலந்து கொள்வது.
6. 07.07.2022 அன்று நடைபெறவுள்ள மனித சங்கிலி இயக்க போராட்டம் சம்மந்தமாக, ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் கூடி முடிவு எடுப்பது.
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் முடிவுகளை செம்மையாக நிறைவேற்றுமாறு மூன்று சங்கங்களின் உறுப்பினர்களை தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.