AUAB சார்பாக கொடுக்கப்பட்ட போராட்ட அறைகூவல்படி, 21.06.2022 அன்று சேலம் மாவட்ட AUAB சார்பாக, சேலம் GM அலுவலகத்தில் எழுச்சிமிகு தர்ணா போராட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் S. ஹரிஹரன் (BSNLEU), D. தியாகராஜன் (AIGETOA), V. குருவாயூர் கண்ணன் (SNEA) V. சண்முகசுந்தரம் (AIBSNLEA) தலைமை குழுவாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
SNEA அமைப்பின், மத்திய குழு உறுப்பினர் தோழர் G. சேகர், AGM போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். அவரை தொடர்ந்து தோழர் J. தினகரன், மாநில நிர்வாகி, AIGETOA, தோழர் M. கணேசன், AIBSNLPWA சேலம் மாவட்ட செயலர், தோழர் S. தமிழ்மணி, AIBDPA சேலம் மாவட்ட செயலர், தோழர் P. பொன்ராஜ், மாவட்ட பொருளர் SNEA, தோழர் V. அன்பழகன் மாவட்ட பொருளர், AIGETOA, தோழர் K. R. கணேசன், மாநில உதவி தலைவர், AIPRPA, தோழர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு, தோழர் M. செல்வம், சேலம் மாவட்ட செயலர், TNTCWU, தோழர் N. சுரேந்தர், மாவட்ட உதவி செயலர் AIGETOA, தோழர் R. ரமேஷ், மாநில அமைப்பு செயலர், BSNLEU ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பின்னர், தோழர் K. ஸ்ரீனிவாசன், மாவட்ட செயலர், SNEA, தோழர் B. மணிகுமார், மாவட்ட செயலர், AIGETOA, தோழர் E. கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
BSNLEU மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம், நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டது பாராட்டத்தக்கது.
திரளாக போராட்டத்தில் கலந்து கொண்டு இயக்கத்தை வெற்றி பெற செய்த அனைத்து சங்க தோழர்களுக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்.