Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, June 1, 2022

தொலை தொடர்பு துறையின் செயலருக்கு BSNLEU கடிதம்


ஊழியர்களுக்கான IDA உயர்வை வழங்கக் கூடாது என CMD BSNLக்கு DoT உத்தரவு - இந்த முடிவை, மறு பரீசீலனை செய்ய வேண்டும் என தொலை தொடர்பு துறையின் செயலருக்கு BSNLEU கடிதம்.


01.10.2020 முதல் 30.06.2021வரையிலான காலத்திற்கு வழங்க வேண்டிய IDA உயர்வை, BSNL நிர்வாகம், சட்டவிரோதமாக நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக, கேரள உயர்நீதி மன்றத்தில், BSNL ஊழியர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. BSNLல் உள்ள ஊழியர்களுக்கு, IDA நிலுவை தொகையை வழங்க வேண்டுமென, கேரள உயர்நீதிமன்றம், CMD BSNLக்கு உத்தரவிட்டது.

ஆனாலும், அதனை வழங்குவதற்கு CMD BSNL, காலதமதப்படுத்தினார். இதற்கு பின், ஊழியர்களுக்கான IDA உயர்வு தொகையை வழங்க வேண்டாம் என CMD BSNLக்கு தொலை தொடர்பு துறை உத்தரவிட்டது. 

இந்த சூழ்நிலையில், ஊழியர்களுக்கு IDA நிலுவை தொகை வழங்க கூடாது என CMD BSNLக்கு உத்தரவிட்டுள்ள முடிவை, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், தொலை தொடர்பு துறையின் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்