ஒரு முக்கியமான மத்திய செயற்குழுவை, BSNL ஊழியர் சங்கம் காணொளி காட்சி மூலம், இன்று (02.06.2022) நடத்தியது. 45 மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்கு, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா தலைமை தாங்கினார். இந்தக் கால கட்டத்தில் உயிரிழந்த தோழர்களுக்கு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, ஆய்படு பொருட்களை அறிமுகம் செய்து உரை நிகழ்த்தினார். அதன் பின், அனைத்து மத்திய செயற்குழு உறுப்பினர்களும், விவாதத்தில் பங்கேற்றனர். ஆய்படு பொருட்களின் மீது பொருத்தமான முடிவுகளை எடுக்க, அனைத்து மத்திய செயற்குழு உறுப்பினர்களும், தங்களின் செறிவான கருத்துக்களை முன்வைத்தனர். இந்தக் கூட்டம் மிகச்சரியாக காலை 10.00 மணிக்கு துவங்கி மாலை 5.30 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த மத்திய செயற்குழுவில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன:-
1) இந்திய விடுதலையின் 75வது ஆண்டினை கொண்டாடும் வகையில், விடுதலை போராட்டத்தில், உழைப்பாளி வர்க்கத்தின் பங்கினையும், தியாகத்தையும் எடுத்துரைக்கும் வகையில், சிறப்புக் கூட்டங்களையும், கருத்தரங்கங்களையும் நடத்துவது.
2) தேசிய பணமாக்கல் திட்டம்/ பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவது ஆகியவற்றிற்கு எதிராக, நமது பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துவது. இதற்கான திட்டங்களும், தேதிகளும், 04.06.2022 அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
3) ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண்பது மற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் இதர முக்கியமான பிரச்சனைகளுக்காக, AUAB விடுத்துள்ள, அனைத்து அறைகூவல்களையும் வெற்றிகரமாக நடத்துவது.
4) 9வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட, ஒரு விரிவடைந்த மத்திய செயற்குழுவை நடத்துவது.
5) BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் அகில இந்திய கருத்தரங்கத்தை, மகராஷ்ட்ரா மநிலத்தில் நடத்துவது.
மேலும் கீழ்கண்ட முக்கியமான பிரச்சனைகளின் மீது தீர்மாணங்களும் நிறைவேற்றப்பட்டன:-
அ) கோவிட்-19 மற்றும், பணியில் இருக்கும் போது ஏற்பட்ட விபத்துக்களால் உயிரிழந்தவரக்ளின் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வண்ணம், பரிவு அடிப்படையிலான பணி நியமனத்திற்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
ஆ) 31.01.2020க்கு முன் இருந்த பதவிகளை கணக்கில் கொண்டு, JTO மற்றும் இதர ஊழியர்களுக்கான இலாகா தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்.
இ) மேலும் காலதாமதமின்றி, லூதியானாவில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈ) பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற JTO இலாகா தேர்வு முடிவுகளை, மேலும் காலதாமதமின்றி உடனே வெளியிட வேண்டும்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்