BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம், 22.07.2022, வெள்ளிக்கிழமை அன்று, சேலம் செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முறையான அறிவிக்கை மற்றும் நோட்டீஸ் கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நமது மாநில செயலர் தோழர் P. ராஜு செயற்குழுவை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கவுள்ளார். 9வது சரிபார்ப்பு தேர்தல் ஆயுத்த கூட்டமாக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் சார்பு கிளை தலைவர், செயலர், பொருளர், முன்னணி ஊழியர்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.
01.05.2022 முதல் 30.06.2022 வரை ஓய்வு பெற்ற நமது தோழர்களை கௌரவப்படுத்த உள்ளோம். கிளை செயலர்கள் தங்கள், கிளைகளில் ஓய்வு பெற்ற நமது தோழர்களை அழைத்து வரவும்.
தோழர்கள் தங்கள் வருகையை குறித்த நேரத்தில் உறுதிப்படுத்தினால் சற்று வசதியாக இருக்கும். சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்