Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 26, 2022

சேம நல வாரிய கமிட்டி கூட்ட முடிவுகள்


கடந்த 2020 டிசம்பர் மாதத்திற்கு பின், சேலம் மாவட்ட பொது மேலாளர் சேம நல வாரிய கமிட்டி கூட்டம் கூட்டப்படாமல் இருந்தது. நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் கூட, கூட்டம் கூட்டப்படுவதில் சுணக்கம் காணப்பட்டது. நீண்ட நெடிய தொடர் முயற்சிக்கு பின், 29வது சேம நல வாரிய கமிட்டி கூட்டம் இன்று (26.07.2022) கூட்டப்பட்டது. 

நமது BSNLEU சங்கம் சார்பாக, மாவட்ட தணிக்கையாளர் தோழர் R. ராதாகிருஷ்ணன் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஏற்கனவே, கேந்திரமான நமது கோரிக்கைகளை, எழுத்து பூர்வமாக நிர்வாகத்திற்கு வழங்கியிருந்தோம். கூட்டத்தில் சில புதிய கோரிக்கைகளையும், நமது தோழர் வலியுறுத்தினார். நமது அத்துணை கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

கூட்டத்தின் முடிவுகள்

1. Tablet Loan என்கிற பெயரில் ரூ.10,000.00 கடன் வழங்கப்படும் முதல் 150 நபர்களுக்கு இந்த கடன் முதலில் வழங்கப்படும். 10 மாதங்களில் மாதம் தலா ரூ.1,000.00 விகிதம் பிடித்தம் செய்யப்படும். கடைசி மாதத்தில் ரூ. 229.00 வட்டி பிடித்தம் செய்யப்படும். 13 மாதம் சேவை காலம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. இன்றைய தினம், சேம நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 398 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, அழகான சுவர் கடிகாரம் GIFT ஆக வழங்கப்படும்.

3. 20 / 30 வருடங்கள் சேவை முடிப்பவர்களுக்கு, ரூ. 2000 / ரூ. 3000  GIFT ஆக தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 20 / 30  சேவை கால கணக்கீட்டை, 15 / 20 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என நாம் கோரியிருந்தோம். நீண்ட விவாதத்திற்கு பின், சேவை காலம் 20 / 25 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 01.04.2022 அன்று 20 / 25 ஆண்டுகள் சேவை முடித்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ. 2000 / ரூ. 3000  HONORARIUM ஆக வழங்கப்படும். 

01.04.2021 முதல் 31.03.2022 விடுபட்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் பட்டுவாடா செய்யப்படும். 

4. செவி திறன் குறைபாடு உள்ள மாற்று திறனாளி உறுப்பினர்களுக்கு, கருவி வாங்க உதவி தொகை ரூ 5000.00 ஒரு முறை மட்டும் வழங்கப்படும்.

5. பணி நிறைவு பாராட்டு விழாவில் SHAWL வாங்குவதற்கு தற்போது வழங்கப்படும் ரூ.250.00 தொகை,  ரூ 500.00 ஆக உயர்த்தப்படும்.

6. ஏற்கனவே மாநில சேம நல வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வாரிய கமிட்டி உறுப்பினர்கள் உயிர் இழக்க நேரிட்டால், அவர்தம் குடும்பத்திற்கு வழங்கப்படும் ஈம சடங்கு செலவு தொகை ரூ.20,000.00 திலிருந்து ரூ. 50,000.00 ஆக உயர்த்தப்படும். கார்ப்பரேட் அலுவலக வழிகாட்டுதல் வந்தபின் நமது மாவட்டத்திலும் அமுல்படுத்தப்படும்.

7. இனி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சேம நல வாரிய கமிட்டி வரவு செலவு கணக்கு, தல மட்ட நிர்வாக இணையத்தில் வெளியிடப்படும். 

நமது நியாயமான கோரிக்கைகளை ஏற்று, சாதக முடிவு எடுக்க உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றிகள். கூட்டத்தில் நமது கருத்துக்களை அழுத்தமாக தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்ட நமது BSNLEU சங்க சார்பு சேம நல வாரிய கமிட்டி உறுப்பினர் தோழர் R. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, நமது வாழ்த்துக்கள். 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்