Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 26, 2022

சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு


22.07.2022 அன்று சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம்,  சேலம் செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில், வெகுசிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை மாவட்ட செயலர் தோழர் E. கோபால், ஏற்றிவைத்தார். மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம் அஞ்சலியுறை நிகழ்த்த,  மாவட்ட உதவி தலைவர் தோழர் K. ராஜன் அனைவரையும்  வரவேற்றார்.

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், மாநில அமைப்பு செயலர் தோழர் R. ரமேஷ் செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார். AIBDPA  சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி வாழ்த்துரை வழங்கினார்.

9வது மாநில மாநாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில செயலர் தோழர் P.   ராஜு சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், நாம் நடத்தி கொண்டிருக்கின்ற இயக்கங்கள்,  ஒருங்கிணைப்பு குழு, AUAB கூட்டமைப்பு, 3 வது ஊதிய மாற்றம், புதிய NEPP திட்டம், தபால் தந்தி இயக்க வரலாறு, புதிய பொருளாதார கொள்கைகள் பாதிப்புகள், 9வது சரிபார்ப்பு தேர்தல், இலாக்கா பதவி உயர்வு போட்டி தேர்வுகள், சென்னை சொசைட்டி உள்ளிட்ட விஷயங்களை விளக்கி சிறப்புரை வழங்கினார். மாநில செயலர் உரைக்குப்பின், மாவட்ட செயலர் தோழர் E. கோபால் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்கவுரை வழங்கினார். 

அதன்பின் பனி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. 1.5.22 முதல் 30.06.2022 வரை இலாக்கா பணி நிறைவு செய்த, நமது  தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.  BSNLEU பேரியக்கம் தான் ஊழியர் நலன் காக்கும், சமரசமற்ற போராட்ட நாயகன் என உணர்ந்து திருத்தல்வாத சங்கத்தில் இருந்து விலகி, நமது BSNLEU பேரியக்கத்தில் இணைந்த தோழர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர். AIBDPA மாவட்ட உதவி செயலர் தோழர் S.அழகிரிசாமி, வாழ்த்துரை வழங்கினார். 

உணவு இடைவேளைக்கு பின், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆய்படு பொருள் மீதான விவாதத்தில் பங்குபெற்றனர். மாவட்ட செயலர், மாநில செயலர் தோழர்களின் விவாதத்திற்கு பதில் அளித்தனர். 9வது சரிபார்ப்பு தேர்தல் வியூகங்கள், கிளை கூட்டங்கள், தேர்தல் பணிக்குழு, ஊழியர் சந்திப்பு இயக்கம், அமைப்பு நிலை, தேர்தல் நன்கொடை உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

மாலை சுமார் 5.30 மணி அளவில் தோழர் P. செல்வம் மாவட்ட உதவி தலைவர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்