மீண்டும் ஒரு விருப்ப ஓய்வு திட்டம் மூலம், மற்றொரு 35,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை, அரசாங்கமும், BSNL நிர்வாகமும் எடுத்து வருவதை எதிர்த்தும், விதி 56 (J)ன் கீழ் ஊழியர்களை பணி நீக்கம் செய்து விடுவோம் என மிரட்டுவதை கண்டித்தும் , நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று ஊழியர்களை கட்டாய படுத்தும் நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும், நாடு முழுவதும் 17.08.2022 அன்று உணவு இடைவேளை நடத்த, BSNLEU மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி நமது சேலம் மாவட்டத்தில், சேலம் நகர கிளைகள் சார்பாக சேலம் GM அலுவலகம், ஆத்தூர், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், நாமக்கல், ஓமலூர் கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் GM அலுவலகம்