Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, August 26, 2022

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!


9 வது சரிபார்ப்பு தேர்தல் வருகிற 12.10.2022 அன்று நடைபெறவுள்ளதை நாம் அறிவோம்.  தேர்தலில் பங்குபெற வழக்கம்போல், 13 சங்கங்கள் களத்தில் குதித்துள்ளன. 18 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் நமது BSNLEU பேரியக்கத்திற்கு, வரிசை எண் 7 வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் ஒரு அங்கமாக, வரைவு வாக்காளர் பட்டியல் (DRAFT ELECTORAL ROLLS) நாடு முழுவதும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நமது சேலம் மாவட்டத்தில், 250 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். கிளைச்செயலர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்கள் பெயர்கள் எதாவது விடுபட்டுள்ளதா என சரிபார்க்கவும். STR / STP / Civil / Electrical பகுதிகளும் கணக்கில் எடுத்து கொள்ளப்படவேண்டும். சங்க பேதமின்றி பட்டியலை பரிசீலனை செய்யவும். 

அதே போல் வாக்காளர் பட்டியலில், வாக்காளர் பெயர், தந்தையர் / கணவர் பெயர், பதவி, PER NUMBER, பாலினம், பணிபுரியும் இடம் போன்றவற்றில்  திருத்தம் ஏதேனும் உள்ளதா? விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதையும் கூர்ந்து பரிசீலித்து, திருத்தங்கள் இருப்பின், மாவட்ட சங்கத்திற்கு 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள், தகவல் தெரிவிக்கவும்.

மாவட்ட சங்கம் திருத்தம் தெரிவிக்க கடைசி நாளான 29.08.2022 அன்று மாவட்ட நிர்வாகத்திடம் திருத்தம் தெரிவிக்கும். கால நிர்ணயத்துடன் கூடிய பணி என்பதால் கிளை செயலர்கள் சற்று கூடுதல் முனைப்பு காட்ட, தோழமையுடன் கோரப்படுகிறார்கள். 

வணிக பகுதி என்கிற அடிப்படையில். சேலம் மாவட்டத்தில் 250 வாக்காளர்கள் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், 74 வாக்காளர்கள் உள்ளனர்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்