23.09.2022 வெள்ளிக்கிழமை,
செவ்வை தொலைபேசி நிலையம், சேலம் - 2
BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம், சேலம் செவ்வை தொலைபேசி நிலைய 7வது தள கூட்ட அரங்கில், 23.09.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S. செல்லப்பா சிறப்புரையாற்றவுள்ளார்.
கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், தங்கள் கிளைக்கு உட்பட்ட நமது உறுப்பினர்கள் அனைவரையும், கூட்டத்திற்கு அழைத்து வருமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு.